Saturday, March 29, 2014

துபாய் – திருச்சி – துபாய் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை தற்காலிக நிறுத்தம்!


துபாய் விமான நிலையத்தின் ஒடுதள விரிவாக்கப் பணி நடை பெறுவதால் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸின் துபாய் – திருச்சி -துபாய் தினசரி விமான சேவை மே 1 , 2014 முதல் ஜூலை 20, 2014 வரை சுமார் இரண்டரை மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக மே 1 , 2014 முதல் ஜூலை 20, 2014 வரை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு தினசரி செயல்படும் .

ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை IX 616 சார்ஜாவிலிருந்து தினசரி காலை 8:00 மணிக்கு புறப்பட்டு மதியம் 13:40 மணிக்கு திருச்சியை சென்றடையும் , விமான சேவை IX 615 மதியம் 14:45க்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு மாலை 17:35 மணிக்கு சார்ஜாவை வந்தடையும்.

இந்த தகவலை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் தனது இணையதளம் மூலம் அறிவித்துள்ளது.

airindiaexpresstrzshj

அப்ஸல் குரு விவகாரத்தில் இந்தியா சர்வதேச சட்டங்களை மீறியது: ஆம்னஸ்டி!


பாராளுமன்ற தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட அப்ஸல் குருவை, சர்வதேச சட்டங்களை மீறி இந்தியா தூக்கிலிட்டது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் தெரிவித்துள்ளது.

உலகில் நடக்கும் மரணத்தண்டனைகள் குறித்த வருடாந்திர ஆய்வறிக்கையில் ஆம்னஸ்டி கூறியிருப்பது:

அப்ஸல் குருவிற்கு தான் நிரபராதி என்பதை நிரூபிக்க, அவர் விரும்பிய ரீதியிலான சட்டப் பாதுகாப்போ, தகுதியுடைய வழக்கறிஞரையோ கிடைக்கவில்லை. சர்வதேச சட்டங்களை கடைப்பிடிப்பதில் இந்தியா தவறிழைத்துள்ளது.

அப்ஸல் குருவை தூக்கிலிடும் நேரத்தையோ இதர தகவல்களையோ அவரது குடும்பத்திற்கு அளிக்கப்படவில்லை. தூக்கிலிட்ட பிறகு அவருடைய உடலை குடும்பத்தினருக்கு அளிக்காததும் கடுமையான சட்ட மீறலாகும்.

அதேவேளையில் கடந்த ஆண்டு மரணத்தண்டனை விதிக்கப்பட்ட 18 பேரின் கருணை மனுக்களை நிராகரித்த குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, 25 ஆண்டுகளில் மிக அதிகமான கருணை மனுக்களை நிராகரித்த குடியரசு தலைவர் ஆவார்.

கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 72 பேருக்கு மரணத்தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது. 400 பேர் மரணத் தண்டனையை காத்து இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆம்னஸ்டியின் அறிக்கை கூறுகிறது.

ஒருவர் மீது குற்றம் நிருபிக்க படாமல் கூட்டு மனசாட்சி அடிப்படை யில் தூக்கு தண்டனை வழங்கியது இது தான் இந்தியாவில் முதன் முறை சிலரை திருப்பிதி படுத்தவே அப்சல் குரு தூக்கிலிட பட்டு இருக்கிறார் என்று சமூக ஆர்வலர் அருந்ததி ராய் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்கள்

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு இலங்கை முட்டுக்கட்டையா?


தமிழகத்தில் திருச்சி மற்றும் கோவை உள்பட நாடு முழுவதும் 5 விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக தரம் உயர்த்த 4.10.2012-ல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் தற்போது ஓடுதளம் 8,000 அடி நீளம் உள்ளது. ஆனால் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும்போது, இந்த ஓடுதளத்தின் நீளம் 12,000 அடி நீளமாக அதிகரிக்கப்பட வேண்டும். ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்து அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு விமான நிலைய ஆணையம் கோரிக்கை விடுத்தது.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில், விமான நிலைய இயக்குநர், இணை இயக்குநர் (வேளாண்மை), துணை இயக்குநர் (தோட்டக்கலைத் துறை), உதவி இயக்குநர் (நில அளவை), வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவால், ஓடுதள விரிவாக் கத்துக்கு 510 ஏக்கர் நிலம் தேவை என கண்டறியப்பட்டது. இதில் 168.48 ஏக்கர் நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது. ராணுவ நிலத்தை பெறுவது தொடர்பாக ராணுவ அமைச்சகத்துக்கு கடிதங்கள் எழுதப்பட்டன. ஆனால் எவ்வித பதிலும் இல்லை.

இந்நிலையில், விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக நீடிக்கும் தடைகளைக் களைய வேண்டுமென மக்களவையிலும், ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியை சந்தித்தும் ராணுவ நிலத்தை ஒப்படைவு பெற அனுமதி அளிக்கக் கோரி கடந்த ஆண்டில் திருச்சி மக்களவை உறுப்பினர் ப.குமார் மனு அளித்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி ப. குமாருக்கு அனுப்பிய கடிதத்தில், “ராணுவ நிலத்தை கோரும்போது, அதற்கு இணையான மதிப்புடைய நிலத்தை ராணுவத்துக்கு மாநில அரசு வழங்க வேண்டும். இதற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டால் விரிவாக்கத்துக்கென 168.48 ஏக்கர் நிலத்தை வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சியில் சர்வதேச விமான நிலையம் அமைந்தால், அது தங்கள் நாட்டின் விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை கருதி, திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு மறைமுகமாக முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து திருச்சி மக்களவை உறுப்பினர் ப. குமாரிடம் கேட்டோம். அவர் கூறியது: “நீங்கள் சொல்வது புதிதாக உள்ளது. தமிழக மக்களின் நலன் முக்கியம் என தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். திருச்சி மக்களின் தேவைகளை முதன்மையாகக் கொண்டு நான் மக்களவையில் முன்வைத்த கோரிக்கைகளில் விமான நிலைய விரிவாக்கமும் ஒன்று. திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு முதலில் ராணுவ நிலத்தை ஒப்படைவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணுவத்துக்கு வழங்குவதற்கான மாற்று இடமும் தயாராக உள்ளது. இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியரும் மிகுந்த முனைப்போடு செயலாற்றி வருகிறார். இதை மீறி வேறெதும் தடைகள் இருப்பதாகத் தெரியவில்லை” என்றார் அவர்.

வில்லங்க சொத்து வாங்காதீங்க !!

வில்லங்க சொத்து வாங்காதீங்க !!விசனேஷன் பிராபர்டி கேர் நிர்வாக இயக்குனர்  கூறியதாவது:-
வீடு, மனை, நிலம், பில்டிங் என எந்தவிதமான சொத்து வாங்கும்போதும், விற்கும்போதும் ஏமாற்றம் அடையாமலும் எந்தவித வில்லங்கங்களிலும் மாட்டிக் கொண்டு அலைச்சலும், அவஸ்தையும் படாமலும் இருக்க தேவையான ஆலோசனைகளையும், சேவைகளையும் எங்கள் நிறுவனம் வழங்குகிறது.
எங்கள் நிறுவனத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி, ஞிஜிசிறி கமிஷனர், தாசில்தார், சார்பதிவாளர், சர்வேயர், க்ஷிகிளி, கட்டிட பொறியாளர், வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்து வல்லுனர்களும் ஒரு குழுமமாக செயல்படுகிறோம்.
மக்களின் சொத்து பரிமாற்றம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வுகளை வழங்குவதோடு, எல்லா சேவைகளையும் ஒரே இடத்தில் சென்னை எழும்பூரில் உள்ள எங்கள் விசனேஷன் பிராபர்டி கேர் நிறுவனம் மூலம் செய்து தருகிறோம்.
12x10 Visionation 07-12-2013