Thursday, April 10, 2014

அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம் !!


கோத்ராவில் நடந்த ரயில் எறிப்பும் அதனை தொடர்ந்து மூன்று தினங்கள் மொத்த குஜராத் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு ஒரு விடுப்பு எடுத்துச் சென்றதும், அதன் விளைவாக என்ன நடந்தது என்பதை பார்த்து உலகமே தலைகுனிந்து பார்த்தது.

கோத்ரா ரயில் எறிப்பு இஸ்லாமியர்கள் செய்த தவறு என்றும், அந்த தவறுக்கு பதிலாகவே அதன் அடுத்து நிகழ்ந்த 2000 இஸ்லாமியர்களின் படுகொலையையும் ஞாயப்படுத்த முயன்றது சமூகம்.

இந்த குஜராத் இனப்படுகொலையில் என்ன நிகழ்ந்தது என்பதை அறிய விருப்பம் இருப்பவர்களுக்கு இந்த நூல் மிகவும் பயணுள்ளதாக அமையும். இந்த புத்தகம் மொத்த குஜராத் இனப்படுகொலையின் மறுபக்கத்தை காட்டுகிறது.

இந்தியாவின் மிக முக்கியமான பத்திரிக்கையாளரான ஆஷிஷ் கேத்தன், குஜராத்தில் தங்கியிருந்து தன் உயிரையும் பனயம் வைத்து செய்த ஆய்வு தான் அடுத்து வரும் பக்கங்களில் பதிவு செய்துள்ளார். கோத்ரா ரயில் எறிப்பு என்பது ரயிலுக்கு வெளியே இருந்து கொளுத்தியது அல்ல மாறாக ரயிலுக்கு உள்ளே இருந்து தான் நடந்தது என்பதையும் அவர் உயிரோடு இருந்த ரயில் பயணிகளின் பேட்டிகள் மற்றும் சாட்சியஙக்ளின் அடிப்படையில் நிறுவியிருக்கிறார்.

கோத்ரா இனப்படுகொலையில் முக்கிய பங்காற்றியவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களின் பெருமிதமான அனுபவஙக்ளை காமிராவில் பதிவு செய்தார் ஆஷிஷ் கேத்தன். அவர்கள் தங்களின் சொந்த வார்த்தைகளின் அந்த மூன்று நாட்கள் நடந்த நிகழ்வுகளை மிக துல்லியமாக விவரிக்கிறார்கள். எப்படி இந்த இனப்படுகொலை திட்டமிடப்பட்டது, தலைவர்கள் எப்படி வழிநடத்தினார்கள், காவல்துறை எப்படி வேடிக்கை பார்த்தது, அரசு இயந்திரம் எப்படி வேண்டியதை செய்து கொடுத்தது, நீதிபதிகள் எப்படி உதவினார்கள், குழந்தைகள் – பெண்களை எப்படி எல்லாம் சித்திரவதை செய்தார்கள், எப்படி காங்கிரஸ் எம்.பி யை துண்டு துண்டாக வெட்டினார்கள் என்பதாக நம் ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவங்கள் இந்த புத்தகத்தின் பக்கங்களில் விவரிக்கப்படுகிறது.

மோடி முதல்வராக இருந்திருக்கா விட்டால் அவர் வெடிகுண்டையும் வீசியிருப்பார் என்று ஹிந்துத்துவ வெறியர்கள் உண்மையை விளக்கமாக சொல்கிறார்கள். ராக்கெட் செலுத்தும் கருவிகளை எப்படி தயாரித்தார்கள் என்று ஒருவர் விளக்குகிறார்.

இனி வரும் பக்கங்களில் இருப்பவற்றை நீங்களே வாசித்து அறிந்து கொள்க. நரேந்திர மோடி இந்த இனப்படுகொலையை எப்படி திட்ட்மிட்டு செய்தார் என்பதையும் எப்படி இந்த இனப்படுகொலையை செயல்படுத்தியவரகளை அவர் அமைச்சராக்கி அழகு பார்த்தார் என்பதை நாம் அறிவோம். வாசியுங்கள், பகிருங்கள் இந்த உண்மையை உங்கள் நண்பர்களிடம், உறவினர்களிடம், தோழர்களிடம்.

இந்த தேர்தல் காலத்தில் இந்த புத்தகம் ஒரு விவாதத்தை உருவாக்க உதவியாக இருக்கும் என்று பல நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அதன் அடிப்படையில் தான் இந்த புத்தகம் அச்சுக்கு அனுப்பபட்டுள்ளது. இந்த நூலை ஒரு அரசியல் பணியாக மக்களிடம் கொண்டு செல்ல் வேண்டும், அதற்கு உங்கள் அனைவரின் உதவியையும் நாடுகிறேன்.

மலிவு விலையில் கொண்டு வர நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன, மொத்தமாக முன்பணம் கொடுத்து புத்தகத்தை நீங்கள் பெறலாம், புத்தகத்தை ஏலத்தில் எடுத்து இந்த முயற்சியை வரவேற்கலாம், இதில் பெறப்படும் மொத்த தொகையும் மேலும் மலிவு பதிப்புகள் அச்சடித்து மக்களிடம் கொண்டு செல்லவே பயன்பத்த்தப்படும். வாருங்கள் தோள் தாருங்கள். மேலும் விபரங்களுக்கு முகநூல் INBOX அல்லது muthusmail@gmail.com

BANK ACCOUNT DETAILS :
A.MUTHUKRISHNAN
State Bank of INDIA
SB ac non – 30322814376
Madurai Kamaraj University Branch
IIFSC SBIN0002235

நன்றி
முத்து கிரிஷ்ணன்

மோடியால் அனைத்து மசூதிகளுக்கும் ஆபத்து: கருணாநிதி


புதுச்சேரி: மோடி ஆட்சிக்கு வந்தால் நாட்டிலுள்ள அனைத்து மசூதிகளுக்கும் ஆபத்து ஏற்படும் என்றும்,  மனைவியை மறைத்த மோடி நாட்டை ஆள நேரிட்டால், இன்னும் என்னென்ன உண்மைகள் வெளிவருமோ என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் நாஜிம் எம்.எல்.ஏ.வை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”இதுவரை தனக்கு திருமணம் ஆனதை அறிவிக்காமல் மறைத்து வந்த மோடி, இன்று தனக்கு திருமணமாகி விட்டது என்றும், தனது மனைவி யார் என்றும் கூறியிருக்கிறார். அவர் தனது மனைவியை மறைக்க என்ன காரணம். இப்படிப்பட்டவர் நமது நாட்டை ஆள நேரிட்டால், இன்னும் என்னென்ன உண்மைகள் வெளிவருமோ என தெரியாது. இப்படிப்பட்ட ஒருவர் தென்னகத்தில் உள்ளவர்களை, தமிழகத்தில் உள்ளவர்களை, திராவிடர்களை, புதுச்சேரியில் உள்ளவர்களையெல்லாம் ஆளப் போகிறார் என்றால், அந்த ஆட்சி எப்படி இருக்கும். எனவே, யார் நாட்டை ஆள வேண்டும் என்ற நியாயத் தராசு நம்மடைய கையில்தான் இருக்கிறது. அதன்படி வாக்களியுங்கள். மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரு பாபர் மசூதி மட்டுமல்ல, நாட்டிலுள் அனைத்து மசூதிகளுக்கும் ஆபத்து ஏற்படும்” என்றார்.

நாடாளுமன்ற தேர்தல்: டெல்லியில் 52 %; கேரளாவில் 72 % வாக்குகள் பதிவு!


இன்று நடைபெற்ற நாடாளுமன்ற 3வது கட்ட தேர்தலில்  டெல்லியில் 60  சதவீதமும், கேரளாவில் 72  சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

நாடாளுமன்றத்திற்கான 3 ஆம் கட்ட தேர்தல் இன்று, 11 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்றது.

கேரளாவிலுள்ள 20 தொகுதிகளுக்கும், டெல்லியிலுள்ள 7 தொகுதிகளுக்கும், ஹரியானாவிலுள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது.

மேலும், பீகாரில் 6 தொகுதிகளிலும், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 10 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தில் 9 தொகுதிகளிலும், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், அந்தமான் நிகோபர், சண்டிகர், லட்சத்தீவுகள் ஆகியவற்றில் தலா 1 தொகுதிகளிலும் என மொத்தம் 91 தொகுதிகளில் நடைபெறுகிறது.

இதேபோல், ஒடிசாவில் 71 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவிலுள்ள ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடைபெறவுள்ள இடங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

டெல்லியில் 60 சதவீத வாக்குகள் பதிவு

டெல்லியில் உள்ள 7 தொகுதியிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்ட அரசியல் நட்சத்திரங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், சராசரியாக 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

கேரளாவில் 72 சதவீத வாக்குகள் பதிவு

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் கிராமங்கள் மற்றும் மாநிலத்தின் உள்புற பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளில் பெண்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். சில இடங்களில் காலையிலேயே நீண்ட வரிசை காணப்பட்டது.

இது போல திருவனந்தபுரம், கொல்லம் தொகுதிகளிலும் காலையிலேயே வாக்கு திவு வேகமாக நடந்தது. சாலக்குடி, காசர்கோடு உள்ளிட்ட தொகுதிகளில் புதிய வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வந்தனர்.  மாநிலத்தின் தெற்கு பகுதியில் அதிக அளவு வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்நிலையில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தபோது, சராசரியாக 72 சதவீதம் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேப்போன்று மற்ற மாநிலங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது.

பெண்ணை நிர்வாண சோதனையிட்ட அமெரிக்க அதிகாரிகள்: (வீடியோ இணைப்பு)


அமெரிக்க அதிகாரிகள் நிர்வாணப்படுத்தி சோதனையிட்ட பெண்ணுக்கு ரூ. 2 கோடி நஷ்ட ஈடு வழங்ககோரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த டேனா கோல்ம்ஸ் (32) என்ற பெண், கடந்தாண்டு மே மாதத்தில் கோல் சிட்டி, இலினோய்ஸ் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவர் மீது சந்தேகம் அடைந்த சட்ட குடியுரிமை அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கோல்ம்ஸ்சை நிர்வாணப்படுத்தி மூன்று அதிகாரிள் சோதனையிட்டது அங்கிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவானது. இதனால் கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகிய அவர், தனக்கு நஷ்ட ஈடு வழங்க கோரி சிகாகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து நீதிமன்ற விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், ரூ 2.14 கோடி (335,000 அமெரிக்க டொலர்) தொகையை கோல்ம்சிற்கு நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது.

Friday, April 4, 2014

‘பொது தேர்தல் 2014’ தமிழாக்க கையேடு சென்னையில் வெளியிடப்பட்டது


இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், ‘பொது தேர்தல் 2014’ என்ற தமிழாக்கம் செய்யப்பட்ட கையேடு சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.

பொதுத் தேர்தல் 2014

இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், ‘‘பொதுத் தேர்தல் 2014’’ என்ற தேர்தல் கையேட்டை தொகுத்துள்ளது. இந்த கையேட்டில், பொது தேர்தல் பற்றிய விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் ஆங்கில பதிப்பு டெல்லியில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலக தலைமை அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நேற்று மாலை, ‘பொதுத் தேர்தல் 2014’ கையேடு தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. 340 பக்கங்கள் கொண்ட இந்த கையேட்டை, பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் நிர்வாக இயக்குனர் கே.எம்.ரவீந்திரன் வெளியிட, இணை தலைமை தேர்தல் அதிகாரி ஏ.சிவஞானம், பத்திரிகை தகவல் அலுவலக இயக்குனர் எம்.வி.பிரசாத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

புள்ளி விவரங்கள்

இந்த தேர்தல் கையேட்டில், பொதுத் தேர்தல்கள் பற்றிய பல்வேறு அம்சங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலில் அனைவரும் பங்கேற்க வகை செய்யும் முயற்சிகள், அழிக்க முடியாத மை, கை விரலில் அடையாளம், பெருமைமிக்கத் தருணம், மாதிரி நடத்தை கோட்பாடுகள் போன்றவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

2009–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் பற்றிய புள்ளி விவரங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதுடன், 2004 மற்றும் 2009 தேர்தலையும் ஒப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சுதந்திரத்திற்கு பிறகு நடந்த அனைத்து பொதுத் தேர்தல் பற்றிய புள்ளி விவரங்களும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்த புத்தகம் பொதுமக்களுக்கு விற்பனைக்கு கிடைக்காது என்றாலும், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இணைய தளத்தில் (www.pibchennai.gov.in) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் 84 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள்

பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2014 குறித்து பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள கையேட்டில், நாடு முழுவதும் 81 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும், தேர்தலுக்காக 9 லட்சத்து 19 ஆயிரம் வாக்குசாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 35 லட்சத்து 28 ஆயிரம் வாக்கு எந்திரங்களும் இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன.

மேலும், வேட்பாளர்கள் யாரும் பிடிக்கவில்லை என்றால், ‘நோட்டா’ பட்டனை அழுத்தி கருத்து தெரிவிக்கும் வசதி இந்த தேர்தலில் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இதுபோன்ற வசதி பிரான்ஸ், பெல்ஜியம், கிரீஸ், பிரேசில், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருக்கிறது. ‘நோட்டா’ வசதியை அறிமுகம் செய்துள்ள 12–வது நாடு இந்தியா ஆகும்.

விமானத் தேடல் முயற்சி கடலுக்கடியில் தொடங்கியது


விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் முயற்சி,இன்று இந்தியப் பெருங்கடல் பகுதியில், கடலுக்கடியில் தொடங்கியிருக்கிறது.

விமானத்தின் விமானிகள் அறையில் நடந்திருக்கூடிய உரையாடல்கள் மற்றும் பிற தரவுகளை ஒலிப்பதிவு செய்திருக்கும் கறுப்புப் பெட்டியிலிருந்து வரும் ஒலியைக் கேட்டு அது இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் கருவிகளை கப்பல்கள் இழுத்துச் செல்கின்றன.

இரண்டு கப்பல்கள் இந்த இழுவைக் கருவிகளுடன் கடலுக்கடியில் சுமார் 240 கிமீ நீளமுள்ள பாதையில் இந்த கறுப்புப் பெட்டி விழுந்திருக்கக் கூடிய இடத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.

இது தவிர , இந்தக் கடல் பகுதியை, வெள்ளிக்கிழமை, 14 விமானங்களும், ஒன்பது கப்பல்களும் தேடும்.

ஆஸ்திரேலியக் கடற்படை கப்பலான, 'ஓஷன் ஷீல்ட்' ,மற்றும் எச்.எம்.எஸ் எக்கோ என்ற கப்பலும் இந்தக் கடலுக்கடியில் கறுப்புப் பெட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கின்றன.

இந்த விமானத்தின் கறுப்புப் பெட்டி, பாட்டரியின் மூலம் இயங்குகிறது. அதன் பாட்டரிகள் 30 நாட்களுக்கு மட்டுமே இயங்கக்கூடிய சக்தி பெற்றவை. இந்த 30 நாள் காலக்கெடு நெருங்குவதால், ( விமானம் காணாமல் போனது மார்ச் 8ம் தேதி) , தேடும் குழுக்களுக்கு இதைத் தேட இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியிருக்கின்றன.

'நல்ல தரவுகளை வைத்தே தேடல் முயற்சி'
கிடைத்திருக்கும் செய்கோள் தரவுகளை வைத்தே இந்த தேடும் பகுதி வரையறுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் இந்தத் தரவுகள் தொடர்ந்து ஆராயப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்டுவருகின்றன என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தற்போதைக்கு இந்தத் தேடல் முயற்சி நடக்கும் பகுதி என்பது, கிடைத்திருக்கும் தரவுகளிலேயே மிகவும் நம்பகமான தரவுகளை வைத்தே நடக்கிறது என்றும் அவர்கள் கூறினர்.

தேடல் முயற்சி நடக்கும் இந்தப் பகுதி சுமார் 2.17 லட்சம் சதுர கிமீ பரப்பளவு கொண்டது.ஆஸ்திரேலிய நகரான பெர்த்துக்கு சுமார் 1,700 கிமீ வட மேற்கே இந்தப் பகுதி அமைந்திருக்கிறது.

இப்பகுதியில் வானிலை வெள்ளிக்கிழமை நன்றாக இருப்பதாகவும், சுமார் 10 கிமீ தூரம் அளவுக்குப் பார்க்கக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேடல் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் குழுவினரை சந்தித்த ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட், " ஒரு பெரிய விமானம் எளிதாகப் பார்த்துவிடக் கூடியதுதான் என்று தோன்றும், ஆனால் ஏறக்குறைய திடீரென்று காணாமல் போன, அதுவும், அணுக முடியாத பகுதியில் காணாமல் போன ஒரு பெரிய விமானத்தைத் தேடுவது என்பது ஒரு அசாதாரணமான சவால்" என்றார்.