Friday, April 9, 2021

மேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

 

மேற்குவங்கத்தில் 4-ஆவது கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் 3 கட்டங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 4ஆவது கட்ட வாக்குப்பதிவு 44 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில் மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளுக்கும் வரும் 29-ஆம் தேதியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. ஏப்ரல் 29ஆம் தேதி 5 மாநில தேர்தல்களும் முழுமையும் முடிவுக்கு வருவதால் அன்றே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் வெளியாக உள்ளன. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது

மே 3ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா?

பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் வேகமாக இருப்பதால் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி பரவலாக இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு பிளஸ் 2 தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன் மூலம் ப்ளஸ் 2 தேர்வுகள் நடைபெறுவது உறுதி என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா முதல் அலையை விட தற்போது நோய் பாதிப்பு மிக வேகமாக உள்ளது. கடந்த முறை தினசரி தொற்று எண்ணிக்கை 5 ஆயிரத்தை தொட பல நாட்கள் எடுத்துக் கொண்டது.

ஆனால் இந்த முறை வெகு சில நாட்களில் தினசரி தொற்று எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதனிடையே 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், தேர்வுகள் நடைபெறும் ஆய்வகங்களின் ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்தே வைத்திருக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு மாணவர் குழுவின் செய்முறை தேர்வுக்கு முன்னரும் பின்னரும் அறைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும் எனவும், கருவிகளையும் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சானிடைசர் அருகே தீப்பற்றக் கூடிய பொருட்களை வைக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்களுக்கு குணமடைந்தபின் வேறு ஒரு நாளில் செய்முறைத் தேர்வு நடத்தலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

newstm.in

 

துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த புதிய உத்தரவை பிறப்பித்தார் ஜோ பைடைன்!

 

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பகுதிகிளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்திட வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ஜோபைடன், துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பல்வேறு நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 30 நாட்களுக்குள் துப்பாக்கிகளின் எண்ணிக்கையை குறைக்க ஒரு விதியை உருவாக்க நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

யுகாதி பண்டிகையையொட்டி குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கிருஷ்ணகிரி அருகே குந்தாரப் பள்ளி வாரச்சந்தையில் யுகாதி பண்டிகையையொட்டி, ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையையொட்டி உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டில், வரும் 13-ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக நேற்று கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் செயல்படும் வாரச்சந்தையில் வழக்கத்தை விடஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. ஆடுகளை வாங்கவும்,விற்பனை செய்யவும், உள்ளூர் மற்று மின்றி வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

இதேபோல், வேலூர், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் குவிந்தனர். இதனால் ஆடு விலை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறும்போது, கடந்த ஆண்டு கரோனாவால் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சந்தை கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது சந்தையில், 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.10 ஆயிரம் வரையும், 15 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.15 ஆயிரம் வரையும், கிடாய் ஆடுகள் அதிகபட்சமாக ரூ.16 ஆயிரம் வரையும் விற்பனையானது.

ஒரே நாளில் சந்தையில் சுமார் ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகி இருக்கும்.ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளதாக தெரிவித்தனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்போடு இருப்போம். தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்!

 

வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள முகாம்களில் விழிப்புணர்வோடு பாதுகாப்பில் ஈடுபடுவோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்து வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு பாதுகாப்பாக வேட்பாளர்களின் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘சட்டப்பேரவைத் தேர்தலில் மிகச் சிறந்த முறையில் பணியாற்றிய தேமுதிகவினர், கூட்டணி கட்சியினர், வேட்பாளர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சி பலம், பண பலம், அதிகார பலத்தை தைரியத்துடன் எதிர்கொண்டு, தமிழகத்தின் எதிர்கால நலனை குறிக்கோளாக கொண்டு அரும்பாடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.வாக்குகள் எண்ணும் மையங்களில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க கட்சித் தொண்டர்கள் இரவு பகல் பாராமல் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ம் தேதியும் எந்தவிதமான அதிகார துஷ்பிரயோகமும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மே 2-ம் தேதி நல்ல தீர்ப்பு வரும் என்றுநம்புவோம்.’ எனக் கூறியுள்ளார்.

சைக்கிளை மட்டுமே குறிவைத்து திருடிய நபர். 40 சைக்கிள்கள் பறிமுதல்! சென்னையில் 40 சைக்கிள்களை திருடிய குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் அதிக அளவு சைக்கிள்கள் சமீபகாலமாக திருடு போயுள்ளன. இது சம்மந்தமாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து சிசிடிவி கேமராக்களை வைத்து சோதனை செய்ததில் திருநீர்மலையைச் சேர்ந்த குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் 40 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தனை சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும், அதன் உரிமையாளர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது

 

சென்னையில் 40 சைக்கிள்களை திருடிய குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் அதிக அளவு சைக்கிள்கள் சமீபகாலமாக திருடு போயுள்ளன. இது சம்மந்தமாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து சிசிடிவி கேமராக்களை வைத்து சோதனை செய்ததில் திருநீர்மலையைச் சேர்ந்த குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் 40 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தனை சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும், அதன் உரிமையாளர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது

Wednesday, January 1, 2020

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா தாவூத் அம்மாள் (வயது 82)



மேலத்தெரு அல்லாபிச்சை குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் முகமது ரஷீது அவர்களின் மகளும், மர்ஹூம் அமீர் ஹம்சா அவர்களின் மனைவியும், ஹாஜி சாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும், ஏ.முகைதீன், ஏ.முகமது அப்தல்லா, ஏ.செய்யது அரபு ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா தாவூத் அம்மாள் (வயது 82) அவர்கள் இன்று இரவு 8 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (02-01-2020) காலை 10 மணியளில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

தகவல் : TIYA
நன்றி : அதிரை நியூஸ்